தேசியம்
செய்திகள்

Calgary வெடிப்பில் குறைந்தது 10 பேர் காயம்

Calgaryயில் வீடொன்றில் நிகழ்ந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

திங்கட்கிழமை (27) காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Calgary தீயணைப்புத் துறை தெரிவித்தது.

பேரழிவுகரமான இந்த வெடிப்பின் காரணமாக ஒரு வீடு முற்றாக அழிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வெடிப்பின் காரணமாக மேலும் இரண்டு வீடுகள் தீப்பிடித்து சேதமடைந்தகாகவும் கூறப்படுகிறது

காயமடைந்த 10 பேரில், ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் வெடிப்பு நிகழ்ந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.

இந்த வெடிப்புக்கு காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இது ஒரு குற்றச் செயலா என்பதை தீர்மானிக்கும் விசாரணைகளை தீயணைப்பு பிரிவுடன் தொடர்வதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

Related posts

கனடிய ஆளுநர் நாயகத்திற்கு ரஷ்யா தடை

Lankathas Pathmanathan

இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கண்டுபிடிப்பு?

Lankathas Pathmanathan

Jim Carrey ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

Lankathas Pathmanathan

Leave a Comment