September 16, 2026
தேசியம்
செய்திகள்

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம்

மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் சட்டமூலம் வியாழக்கிழமை (02) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சட்டமூலம் March மாதம் 2024ஆம் ஆண்டு வரை மருத்துவ உதவியால் இறப்பதற்கான தகுதியை நீட்டிக்கிறது.

March 17, 2024 வரை இந்த தகுதியை நீட்டிப்பதை தாமதப்படுத்தும் மசோதாவை நீதி அமைச்சர் David Lametti அறிமுகப்படுத்தினார்.

வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட சட்டமூலத்தின் கீழ், மனநலக் கோளாறால் மட்டுமே பாதிக்கப்பட்ட கனடியர்கள் மருத்துவ உதவி பெறும் மரணத்திற்கு மேலும் ஒரு வருடத்திற்கு தகுதி பெற மாட்டார்கள்.

குறுகிய கால கட்டத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற NDP, Bloc Quebecois கட்சிகளுடன் தனக்கு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருப்பதாக Lametti கூறினார்.

Senate சபையும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்தியாவசியமற்ற சர்வதேச பயணத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan

2022 வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை $52.8 பில்லியன்

Ontario தேர்தல்: கட்சி தலைவர்கள் நேரடி விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment