தேசியம்
செய்திகள்

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் மூன்றாவது நபர் இந்தியாவில் கைது

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு கடக்க முயன்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் மூன்றாவது சந்தேக நபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் மீது ஆள்கடத்தல் உட்பட குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பதிவு செய்தனர்.

ஏற்கனவே இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் தேடப்பட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் January மாதம் 19ஆம் திகதி Manitoba மாகாணத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு எல்லைக் கடவைக்கு அருகில், கணவன் மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டனர்.

தொடர்புபட்ட செய்தி:

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இருவர் இந்தியாவில் கைது

 

Related posts

Cantaloupe salmonella பாதிப்பில் ஒருவர் பலி!

Lankathas Pathmanathan

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு

Lankathas Pathmanathan

2025 Stanley கோப்பை இறுதித் தொடரில் மீண்டும் Edmonton Oilers!

Lankathas Pathmanathan

Leave a Comment