தேசியம்
செய்திகள்

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இருவர் இந்தியாவில் கைது

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு கடக்க முயன்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் மீது ஆள்கடத்தல் உட்பட குற்றச்சாட்டுகளை குஜராத் காவல்துறையினர் பதிவு செய்தனர்.

இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் தேடப்பட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் January மாதம் 19ஆம் திகதி Manitoba மாகாணத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு எல்லைக் கடவைக்கு அருகில், கணவன் மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டனர்.

Related posts

அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கனடிய அரசிடம் நீடிக்கும் நிச்சயமற்ற தன்மை?

Lankathas Pathmanathan

20 சதங்கள் வரை உயர்ந்த எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை – குழப்பமானவை!

Lankathas Pathmanathan

Leave a Comment