தேசியம்
செய்திகள்

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (23) காலை 10:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

காலை நடைபெற்ற அவசர ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து ஆலோசனைக் குழுக்கூட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது.

நகரசபை மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக Edmonton காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணையின் பின்னர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா

Lankathas Pathmanathan

Pearson விமான நிலையத்தில் திருடப்பட்ட தங்கம் இந்தியா அல்லது துபாயில்?

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் ஒரு Omicron திரிபு

Lankathas Pathmanathan

Leave a Comment