தேசியம்
செய்திகள்

Markham நகரில் விபத்துக்குள்ளான விமானம்!

Ontario மாகாணத்தின் Markham நகரில் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் திங்கட்கிழமை (16) நிகழ்ந்தது.

விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக ஒரு சிறிய விமானம், அருகில் உள்ள நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது

Toronto Buttonville விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்ததை York பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்

இந்த விமானம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்க முயன்ற போது அது தவறி அருகில் உள்ள நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடரும் நிலையில் இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Related posts

கனடா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan

குறைவடையும் வீட்டு வாடகை!

Lankathas Pathmanathan

கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடனான விவாதிக்கவில்லை: அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan

Leave a Comment