தேசியம்
செய்திகள்

Alberta மாகாண புதிய முதல்வர் பதவியேற்பு

Alberta மாகாணத்தின் புதிய முதல்வராக Danielle Smith செவ்வாய்க்கிழமை (11) பதவியேற்றுள்ளார்

Edmonton நகரில் உள்ள அரச இல்லத்தில் நடந்த விழாவில் Albertaவின் 19ஆவது முதல்வராக Smith பதவியேற்றுள்ளார்.

Jason Kenneyக்கு பதிலாக ஐக்கிய Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் Smith, ஆறாவது வாக்கெடுப்பில் 53.77 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இவர் 2006ஆம் ஆண்டு முதல் Albertaவின் பதவி ஏற்கும் எட்டாவது முதல்வராவார்.

Alberta மாகாணத்தின் முதல்வர் பதவியை வகிக்கும் மூன்றாவது பெண் இவராவார்

தனது தலைமையிலான புதிய அமைச்சரவை எதிர்வரும் 21ஆம் திகதி அறிவிக்கப்படும் என Smith ஏற்கனவே கூறியிருந்தார்.

Related posts

மூன்று கனடிய அணிகளுடன் PWHL ஆரம்பம்

Lankathas Pathmanathan

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்படும் தமிழர்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: எழாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment