தேசியம்
செய்திகள்

குறைந்த ஊதியம் பெறும் கல்வி தொழிலாளருக்கு 2 சதவீத உயர்வு

Ontario மாகாணம் குறைந்த ஊதியம் பெறும் கல்வி தொழிலாளர்களுக்கு 2 சதவீத வருடாந்த  உயர்வை முன்மொழிகிறது.

40 ஆயிரம் டொலருக்கு குறைவாக ஊதியம் பெறும் கல்விப் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு சதவிகிதமும், ஏனையவர்களுக்கு 1.25 சதவிகிதமும் என உயர்வை நான்கு வருட ஒப்பந்தத்தில் வழங்க Ontario அரசாங்கம் முன்வந்துள்ளது.

கனேடிய பொது ஊழியர் சங்கத்துடன் பேரம் பேசும் வகையில் இன்று இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த முன்மொழிவு நியாயமானது என கூறிய கல்வி அமைச்சர் Stephen Lecce இது ஸ்திரத்தன்மையை வழங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து தாம் விரக்தியடைந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறுகிறது.

Related posts

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கு முடிவுக்கு வரும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள்

Gaya Raja

Justin Trudeauவின் தலைமை குறித்து இரகசிய வாக்கெடுப்பு

Lankathas Pathmanathan

தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியது Air Canada

Lankathas Pathmanathan

Leave a Comment