தேசியம்
செய்திகள்

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள்

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள் பதிவாகியுள்ளன

இதன் மூலம் செவ்வாய்க்கிழமை (19) முதல் வெள்ளிக்கிழமை (22) உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

Ontarioவில் இப்போது 288 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் உள்ளன.

இந்த எண்ணிக்கை July 11ஆம் திகதி 133ஆக இருந்தது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் மாத்திரமே பெண் என Ontario பொது சுகாதார மையம் கூறுகிறது.

இதேவேளை monkeypox தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் Ontario மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனடா முழுவதும் 681 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் குறித்து அறிந்திருப்பதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இவற்றில் பெரும்பாலானவை Ontario, Quebec மாகாணங்களில் பதிவாகியுள்ளன.

Related posts

200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பப்படுகின்றனர்

Lankathas Pathmanathan

தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் கைது

Lankathas Pathmanathan

கனடா – அமெரிக்க உறவுகள் ‘பலவீனங்களாக’ மாறிவிட்டன: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment