September 14, 2026
தேசியம்
செய்திகள்

முதியோர் பாதுகாப்பு ஓய்வூதிய கொடுப்பனவு 10 சதவீதத்தால் அதிகரிப்பு

முதியோர் பாதுகாப்பு ஓய்வூதிய கொடுப்பனவுகளை கனேடிய அரசாங்கம் அடுத்த வாரம் முதல் அதிகரிக்கவுள்ளது.

75 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு முதியோர் பாதுகாப்பு ஓய்வூதியம் 10 சதவீதம் உயரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

50 ஆண்டுகளில் முதியோர் பாதுகாப்பு ஓய்வூதியம் நிரந்தரமாக உயர்வது இதுவே முதல் முறையாகும்.

Liberal கட்சி இந்த அதிகரிப்பை கடந்த தமது தேர்தல் பிரச்சாரத்திலும் பின்னர் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திலும் அறிவித்திருந்தனர்.

பிரதமர் Justin Trudeau 2019ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் COVID தொற்றின் ஏழாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது

Ontario இந்த ஆண்டு 269 காட்டுத்தீயை எதிர்கொண்டுள்ளது!

Lankathas Pathmanathan

அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குமாறு மாகாண முதல்வர்களை பிரதமர் கோரிக்கை?

Lankathas Pathmanathan

Leave a Comment