February 16, 2025
தேசியம்
செய்திகள்

ஈரான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிக்கு எதிராக கனடாவில் நாடு கடத்தல் வழக்கு

Torontoவில் வசிப்பதாகக் கண்டறியப்பட்ட ஈரானிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிக்கு எதிராக நாடு கடத்தல் வழக்கை கனடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

42 வயதான ஈரானிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி Seyed Salman Samani நாடு கடத்தல் விசாரணையை எதிர்கொள்கின்றார்.

ஈரானின் கடுமையான ஆட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக November 2022 இல் கனடாவில் விதிக்கப்பட்ட தடைகளின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

இவரிடம் விசாரணை நடத்துமாறு குடிவரவு, அகதிகள் வாரியத்திடம் கனடா எல்லை சேவைகள் முகமையகம் கோரியது.

இந்த விசாரணையின் முடிவில் அவர் நாடு கடத்தல் முடிவை எதிர்கொள்ளலாம்.

இந்த விசாரணை கடந்த மாதம் 10ஆம் திகதி பரிந்துரைக்கப்பட்டதாக அகதிகள் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த வழக்கு ஈரானின் உள்துறை துணை அமைச்சராக இருக்கும் 42 வயதான Seyed Salman Samani தொடர்பானதா என்பதை உறுதிப்படுத்த கனடிய அரசாங்கம் மறுத்துவிட்டது.

January 3, 2024 அன்று இந்த விசாரணைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஐந்து கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

கனடாவில் 26 Monkeypox தொற்றுக்கள் உறுதி!

தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெறும் – பெருமான்மையா சிறுபான்மையா என்பது கேள்வி?

Gaya Raja

Leave a Comment