September 11, 2026
தேசியம்
செய்திகள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கால செயலிழப்பின் சேதத்தைத் தணிக்க முறையான ஒப்பந்தத்தை நிறுவ வேண்டும்

கனடாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் செயலிழப்புகளின் சேதத்தைத் தணிக்க ஒரு முறையான ஒப்பந்தத்தை ஏற்படுத்த கனடாவின் தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne பணித்துள்ளார்.

Rogers தலைமை நிர்வாக அதிகாரி உட்பட ஏனைய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்களுடன் Champagne திங்கட்கிழமை (11) சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறையை உருவாக்குவதற்கு 60 நாட்கள் அவகாசம் அளித்ததாக Champagne கூறினார்.

Rogers சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை (08) ஒரு நாள் முழுவதும் சேவை செயலிழப்பை நாடளாவிய ரீதியில் எதிர்கொண்டது.

Rogers செயலிழப்பு பல கைத்தொலைபேசி, இணைய சேவைகள், வங்கிகள், debitகொள்முதல், கடவுட்சீட்டு அலுவலகங்கள், கனடாவின் ArriveCAN செயலி ஆகியவற்றை பாதித்துள்ளது.

முன்பு அறிவித்தபடி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேவை இழப்புக்கான கட்டண மீள் வழங்கலை முன்னெடுப்போம் எனவும் அந்த செயல்முறை குறித்த கூடுதல் தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம் எனவும் Rogers நிறுவனம் தெரிவித்தது.

Related posts

November மாதத்தில் குறைந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan

காவல்துறை அதிகாரி தொடர்பான துப்பாக்கிச்சூடு மரணம் குறித்த SIU விசாரணை

Lankathas Pathmanathan

உக்ரைன் – ரஷ்யா மோதலின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் பேரணிகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment