தேசியம்
செய்திகள்

பாடசாலை அறங்காவலர்கள் பதவியின் எதிர்காலம் என்ன?

பாடசாலை அறங்காவலர்கள் பதவியின் எதிர்காலம் குறித்து உறுதியான கருத்துக்கள் எதையும் தெரிவிக்க Ontario மாகாண முதல்வர் மறுத்துள்ளார்.

பாடசாலை அறங்காவலர்கள் பதவியை முற்றாக நீக்குவது குறித்து உறுதியான கருத்துக்கள் எதையும் தெரிவிக்க Doug Ford மறுத்தார்.

எதிர்வரும் இலையுதிர்காலத்தில் மாகாணம் முழுவதும் உள்ள நகரசபைகளில் தேர்தல் நடைபெறும்.

இந்தத் தேர்தலில் பாடசாலை அறங்காவலர்கள் தேர்தெடுக்கப்படுவார்களா என்பதை கூற Doug Ford மறுத்து வருகிறார்.

இதற்கான பதிலை விரைவில் வெளியிடுவோம் என புதன்கிழமை (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

அவரது அரசாங்கம் அறங்காவலர்களை முற்றிலுமாக நீக்க நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்கவில்லை.

மாகாணத்தில் உள்ள எட்டு பாடசாலை வாரியங்கள் தற்போது மாகாண அரசின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.

Toronto மாவட்ட பாடசாலை வாரியம் உட்பட எட்டு பாடசாலை வாரியங்களின் கட்டுப்பாட்டை கல்வி அமைச்சர் Paul Calandra கைப்பற்றியுள்ளார்.

நிதி முறைகேடு, உள்ளக மோதல், வீண் செலவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்த நடவடிக்கையை கல்வி அமைச்சர் எடுத்துள்ளார்.

இந்த மாத இறுதியில் மாகாணசபை உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு திரும்பும்போது, ​​பாடசாலை வாரியம் குறித்த தெளிவு பாட்டை வழங்க கல்வி அமைச்சர் Paul Calandra உறுதியளித்துள்ளார்.

Related posts

Pearson விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்: 4 பேரை அதிரடியாக கைது செய்தது RCMP!

Lankathas Pathmanathan

Conservative தலைமைத்துவ குழுவும் நிழல் அமைச்சரவையும்

Lankathas Pathmanathan

Mississauga நகர முதல்வர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக களமிறங்கிய முன்னாள் நகர முதல்வர்?

Lankathas Pathmanathan

Leave a Comment