December 12, 2024
தேசியம்
செய்திகள்

ருவாண்டாவில் தூதரகம் ஒன்றை திறக்கும் கனடா

ஆபிரிக்க கண்டத்தில் ரஷ்ய செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதற்காக ருவாண்டாவில் தூதரகம் ஒன்றைத் திறப்பதாக புதன்கிழமை (22) கனடா அறிவித்துள்ளது.

பிரதமர் Justin Trudeau 10 நாள் பயணமொன்றை ஆரம்பித்து புதனன்று ருவாண்டா சென்றடைந்த நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

ருவாண்டாவின் தலைநகரில் நிரந்தர தூதரகத்தை நிறுவுவதுடன், ஒரு தூதரை நியமிப்பதாக கனடிய Foreign வெளிவிவகார அமைச்சர் Melanie Joly அறிவித்தார்.

எத்தியோப்பியாவின் தலைநகரை தளமாகக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்திற்காக புதிய தூதரையும் கனடா நியமிக்கவுள்ளது.

உள்ளூர் நேரப்படி புதன் இரவு ருவாண்டா தலைநகர் சென்றடைந்த Trudeau, வியாழன் முதல் 53 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை சந்திப்பார்.

2018ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை Trudeau சந்திக்கவுள்ளார்.

Related posts

அவசர சிகிச்சை பிரிவுகளில் உதவி கோரும் Ontario!

Gaya Raja

விமான விபத்தில் பலியான கனடியர்களின் அடையாளம் வெளியானது

Lankathas Pathmanathan

Ontario வரவு செலவுத் திட்டம் March 26

Lankathas Pathmanathan

Leave a Comment