September 30, 2026
தேசியம்
செய்திகள்

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

Brampton நகரில் காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு Peel பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர்.

24 வயதான நிவேதன் அழகேஸ்வரன் என்ற இளைஞரை கடந்த 3ஆம் திகதி (December 3, 2021) முதல் காணாமல் போயுள்ளார்.

இவரை கண்டுபிடிப்பதற்கு 21 பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இவர் கடைசியாக Brampton நகரில் Calderstone Road and Lexington Road பகுதியில் காணப்பட்டார்.

இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டு சிகப்பு நிற Nissan Rogue SUVயில் புறப்பட்டுச் சென்றார்.

காவல்துறையினரும் குடும்பத்தினரும் அவரது நலனில் அக்கறை கொண்டுள்ளனர்.

21 பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 extension 2133 என்ற எண்ணில் அழைக்குமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றனர்.

Related posts

தொற்றை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள் என்பது குறித்து கனடியர்கள் தெளிவாக இருக்க வேண்டும்: Trudeau

Gaya Raja

முன்கூட்டிய தேர்தலை நடத்த தயாராகும் Doug Ford

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – செந்தில் மகாலிங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment