தேசியம்
செய்திகள்

கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்ற குற்றவாளிகள் சரண்

இரண்டு கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆயுததாரிகள் சரணடைந்துள்ளனர்.

கனேடிய சுற்றுலாப் பயணிகளான Robert Hall, John Ridsdel ஆகியோர் September 2015 இல் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டனர்.

தெற்கு பிலிப்பைன்சில் கடத்தப்பட்ட அவர்களின் தலை துண்டிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்டு நீண்டகாலமாக தேடப்பட்ட இரண்டு Abu Sayyaf போராளி தளபதிகள் வெள்ளிக்கிழமை (17) சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சரணடைதல் எவ்வாறு, எப்போது ஏற்பாடு செய்யப்பட்டது என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Related posts

NATO பாதுகாப்புச் செலவின இலக்கை எட்டியது கனடா

Lankathas Pathmanathan

ஈரானிய உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை

Lankathas Pathmanathan

சில விமான சேவைகளை இடைநிறுத்த Air கனடா முடிவு?

Lankathas Pathmanathan

Leave a Comment