இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரும் போராட்டம் கடந்து வார விடுமுறையில் Torontoவில் நடைபெற்றது.
Scarborough நகரில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இலங்கை-கனடியர்கள், தங்கள் தாயகத்தில் உள்ள அரசாங்கத்தை அகற்றுமாறு வலியுறுத்தினர்
சனிக்கிழமை (09) மாலை Markham & Sheppard சந்திப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி, மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண உதவுமாறும் பேரணியில் பங்கேற்றவர்கள் கனடாவை வலியுறுத்தினர்.