September 23, 2026
தேசியம்
செய்திகள்

மீண்டும் ஐரோப்பா பயணமாகும் பிரதமர் Trudeau!

இந்த மாதத்தில் ஐரோப்பாவுக்கான தனது இரண்டாவது பயணத்தை கனடிய பிரதமர் Justin Trudeau இந்த வாரம் மேற்கொள்கின்றார்.

புதன்கிழமை (23) Brusselsசில் உள்ள ஐரோப்பிய நாடடாளுமன்றத்தில் Trudeau உரையாற்றவுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாக்க இரு கண்டங்களும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை Trudeau தனது உரையில் வலியுறுத்துவார் என பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (21) தெரிவித்தது.

பிரதமர் வியாழக்கிழமை NATO  தலைவர்களுடன் இணைந்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இராணுவ கூட்டணியின் பதில்  நடவடிக்கையை ஒருங்கிணைப்பார்.

வெள்ளிக்கிழமை கனடா திரும்பும் முன் G7 தலைவர்களின் கூட்டத்திலும் Trudeau பங்கேற்கவுள்ளார்.

Related posts

தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் அவதூறு நடவடிக்கை நிராகரிப்பு

Lankathas Pathmanathan

2032க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்கு செலவிட கனடா உறுதி

Lankathas Pathmanathan

ரஷ்யா மீதான புதிய தடை : பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment