தேசியம்
செய்திகள்

NDPயின் மாகாண சபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்!

Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியில் இருந்து மாகாண சபை உறுப்பினர் Paul Miller விலக்கப்பட்டார்.

NDP கட்சியின் தலைவி Andrea Horwath இந்த முடிவு எடுத்துள்ளார்.

Hamilton East-Stoney Creek மாகாண சபை உறுப்பினரை கட்சியில் இருந்து விலக்கியதற்கான காரணங்கள் குறித்து மேலதிக தகவலை தன்னால் வழங்க முடியாது என திங்களன்று Horwath செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனை ஒரு எளிதான முடிவு அல்ல என கூறிய Horwath, ஆனால் தலைவர்கள் சில நேரங்களில் இது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

2022 தேர்தலில் NDPயின் வேட்பாளராக Miller போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார் என தீர்மானித்ததாக கடந்த வாரம் Horwath ஒரு அறிக்கையில் கூறினார்.

தனக்கு எதிரான ஆதாரங்கள் புனையப்பட்டவை என மாகாண சபை உறுப்பினர் Miller கூறினார்.

Related posts

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

கனடிய பிரதமர் மெக்சிகோ ஜனாதிபதி அடுத்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan

கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகல் – புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பு: Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment