தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் Patrick Brown

Brampton நகர முதல்வர் Patrick Brown கனடாவின் Conservative கட்சியை வழிநடத்தும் தலைமைப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (13) இணைந்தார்.

43 வயதான Brown, 2018 ஆம் ஆண்டு முதல் நகர முதல்வராகப் பணியாற்றி வரும் Bramptonனில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் Conservative கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்யும் வாக்குறுதியுடன், Conservative கட்சியை வழிநடத்தும் போட்டியில் Brown அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

Conservative தலைமைப் போட்டியில் நுழையும் ஐந்தாவது வேட்பாளர் Brown ஆவார்.

ஏற்கனவே முன்னாள் Quebec முதல்வர் Jean Charest, நாடாளுமன்ற உறுப்பினர்களான Pierre Poilievre, Leslyn Lewis, சுயேச்சை Ontario மாகாண சபை உறுப்பினர் Roman Baber ஆகியோர் தலைமை பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Conservative கட்சியின் புதிய தலைவர் September 10ஆம் திகதிக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

Related posts

Quebecகின் இரவு நேர ஊரடங்கு விரைவில் நீக்கம்

Lankathas Pathmanathan

கனடிய பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்?

Lankathas Pathmanathan

Chrystia Freeland அரசில் Mark Carney  நிதி அமைச்சர்?

Lankathas Pathmanathan

Leave a Comment