September 18, 2026
தேசியம்
செய்திகள்

கனேடியர்கள் சர்வதேச அளவில் பயணம் செய்வதை எளிதாக்கும் புதிய விதிகள்

COVID  தொற்றுக்கு மத்தியில் கனேடியர்கள் சர்வதேச அளவில் பயணம் செய்வதை எளிதாகவும் மலிவாகவும் மாற்றும் புதிய விதிகள் திங்கட்கிழமை (28) முதல்  நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த மாற்றம் கனேடியர்களுக்கான சர்வதேச பயணத்தை சற்று எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடியர்கள் முன்னர் நாடு திரும்பும் போது எதிர்மறையான PCR சோதனை முடிவை வழங்கவேண்டி இருந்தது.

திங்கட்கிழமை நிலவரப்படி, பயணிகள் ஒரு rapid antigen test முடிவுடன் மீண்டும் நாட்டுக்குள் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆனாலும் தொற்றின் நிலை மோசமடைந்தால் இன்னும் கடுமையான பயண நடவடிக்கைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என மத்திய சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கட்சித் தலைவர்கள் அழைப்பு!

Gaya Raja

காலாவதியாக உள்ள தடுப்பூசியை வீணாக்க வேண்டாம்: மத்திய அரசு மாகாணங்களிடம் கோரிக்கை

Gaya Raja

கருத்து கணிப்புக்களில் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ள Olivia Chow

Lankathas Pathmanathan

Leave a Comment