தேசியம்
செய்திகள்

PCR சோதனை விடயத்தில் கனடா நெருக்கடியில் உள்ளது: சுகாதார அமைச்சர்

PCR சோதனை விடயத்தில் கனடா நெருக்கடியில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos கூறினார்.

இந்த மாத இறுதிக்குள் 140 மில்லியன் விரைவு சோதனைகளை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு போராடி வரும் நிலையில் இந்த கருத்து வெளியானது.

மாகாணங்களில் PCR சோதனைகளை பெறுவதில் நெருக்கடி எதிர்கொள்ளப்படும் நிலையில் விரைவு சோதனைகள் மிகவும் முக்கியமான கருவியாக இருக்கும் என அமைச்சர் கூறினார்

ஆனாலும் மத்திய அரசாங்கத்திடமிருந்து விரைவு சோதனைகளின் ஏற்றுமதி தாமதமாக வருவதாக சில மாகாணங்கள் கூறுகின்றன.

140 மில்லியன் விரைவு சோதனைகள் இந்த மாத இறுதிக்குள் கனடாவை வந்தடைய உள்ளன என கடந்த வாரம் பிரதமர் Justin Trudeau தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

இரண்டு மாத குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் குடும்ப உறுப்பினர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment