தேசியம்
செய்திகள்

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளில் தாமதம்

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளை கனடிய அரசாங்கம் தாமதப்படுத்துகிறது.

காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos ஆறு மாத இடைநிறுத்தம் அளித்துள்ளார்.

Health கனடா முதன்முதலில் 2019இல் கனடியர்களை அதிகப்படியான மருந்து விலைகளில் இருந்து பாதுகாக்க மாற்றங்களை அறிவித்தது.

ஆனால் இந்த விதிகளை அமுல்படுத்துவதில் அரசு பலமுறை காலதாமதம் செய்து வருகிறது.

எதிர்வரும் January ஆரம்பத்தில்  நடைமுறைக்கு வர வேண்டிய விதிமுறைகள் எதிர்வரும் July ஆரம்பம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய தாமதம், தொழில்துறை, அரசு, மருந்து விநியோக அமைப்பில் உள்ள பிற நிறுவனங்களை தொற்றை  எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த அனுமதிக்கும் என அமைச்சர்  Duclos ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த திருத்தங்கள் காப்புரிமை பெற்ற மருந்துகளில் கனேடியர்களுக்கு பில்லியன் கணக்கான டொலர் களை மிச்சப்படுத்தும் என Health கனடா எதிர்பார்க்கிறது.

Related posts

2026 Paralympics: பத்து பதக்கத்துடன் கனடா

Lankathas Pathmanathan

Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்ற மூன்று கனடிய அணிகள்

Lankathas Pathmanathan

ஆயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment