தேசியம்
செய்திகள்

ஆயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலை

கனடாவில் ஆயிரக்கணக்கான COVID தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் காலாவதியாகும் நிலை தோன்றியுள்ளது.

இந்த தடுப்பூசிகளை விரைவாக மக்களுக்கு வழங்குவதற்கான வழிகளை மத்திய அரசும் மாகாணங்களும் ஆராந்து வருகின்றன.

14 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் இதுவரை மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதாக April மாதம் 14ஆம் திகதி வரையிலான தரவுகள் தெரிவிக்கின்றன.

இவற்றில் 429 ஆயிரத்து 450 Moderna தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் காலாவதியாகிவிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே, March மாதம் 21 ஆம் திகதி காலாவதியான 759 ஆயிரத்து 948 Moderna தடுப்பூசிகள் கடந்த மாதம் வீணடிக்கப்பட்டன.

அதிக எண்ணிக்கையில் விரயத்தை குறைக்க தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவது உள்ளிட்ட சில திட்டங்கள் குறித்து மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

மொத்தம் 51 மில்லியன் தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குவதற்கு கனடா உறுதியளித்திருந்தது.

ஆனாலும் இதுவரை 15 மில்லியன் தடுப்பூசிகளை மட்டுமே கனடா நன்கொடையாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan

கனடாவின் பெரும்பகுதிக்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ள கடுமையான குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

50 மில்லியன் டொலர் மதிப்புள்ள opium பறிமுதல்

Lankathas Pathmanathan

Leave a Comment