தேசியம்
செய்திகள்

Saskatchewan முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிப்பு

 Saskatchewan முதற் குடியிருப்பாளர்களின் முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

George Gordon முதற் குடியிருப்பு புதன்கிழமை (20) இந்த கண்டுபிடிப்பை அறிவித்தது.

Radar மூலம் தரையை  ஊடுருவும் தேடல்களின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது.

தமது சமூகத்தின் நான்கு வெவ்வேறு பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக George Gordon தலைவர் கூறினார்.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய மையம் இந்த பாடசாலையில்  49 மாணவர்கள் இறந்ததாக பதிவு செய்துள்ளது.

கடந்த February மாதம், Saskatchewanனின் மற்றுமொரு முதற் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த தேடுதலின் போது கல்லறைகள் என நம்பப்படும் 54 நில குறிப்புகள் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழர்கள் வாழும் தொடர் மாடி கட்டிடம் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Scarborough கத்திக் குத்தில் 12 வயது சிறுமி பலி! சகோதரர் கைது?

Lankathas Pathmanathan

430 ஆயிரம் புதிய குடிவரவாளர்கள் கனடா வருகை!

Lankathas Pathmanathan

Leave a Comment