தேசியம்
செய்திகள்

ஒரே நாளில் மீண்டும் 3,500க்கும் அதிகமான தொற்றுகள்!

கனடாவில் புதன்கிழமை (08) மாத்திரம் 3,532 COVID தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.
புதன்கிழமை மீண்டும் Ontarioவிலும் Quebecகிலும் தலா ஆயிரத்திற்கும் அதிகமான  தொற்றுக்கள் பதிவாகின.
Quebecகில் 1,367  தொற்றுகளும் இரண்டு மரணங்களும் பதிவாகின.

Ontario சுகாதார அதிகாரிகள் 1,009 தொற்றுகளையும் எட்டு மரணங்களையும் அறிவித்தனர்.

கடந்த 6 மாதங்களில் புதிய தொற்றுகளின் அதிகபட்ச 7 நாள் சராசரி புதன்கிழமை Ontarioவில் பதிவானது.
Albertaவில் 388 தொற்றுகளும் நான்கு மரணங்களும் அறிவிக்கப்பட்டன.
British Columbiaவில் 379 தொற்றுகளும் ஆறு மரணங்களும் பதிவாகின.
Manitobaவில் 178 தொற்றுகளும் மூன்று மரணங்களும் பதிவாகின.

New Brunswickகில் 111 தொற்றுகள் இன்று பதிவு செய்யப்பட்டன.

தவிரவும் ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் இன்று தலா 100க்கும் குறைவான தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
கனடாவில் தொடரின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை அண்மிப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Quebecகில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டன!

Gaya Raja

தமிழ் சமூக மையம் குறித்த நிகர்நிலை சமூக பொது கூட்டம்

Gaya Raja

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan

Leave a Comment