தேசியம்
செய்திகள்

Toronto தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!

Torontoவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
36 வயதான ரமணன் பத்மநாதன் மீது இந்தக் குற்றச்சாட்டுகளை Toronto காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இணையவழி மூலம் குழந்தைகளிடம் ஆபாச புகைப் படங்களை பெற்ற குற்றச்சாட்டுக்களை இவர்  எதிர்கொள்கிறார்.
கடந்த March மாதம் முதலில் கைது செய்யப்பட்ட இவர் மீது 25 குற்றச்சாட்டுக்கள் பதிவாகின.
இவர் மீதான தொடர்ந்த விசாரணையின் பின்னர் மேலும் 68  குற்றச்சாட்டுக்களை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இவரினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என கவலை வெளியிட்டுள்ள காவல்துறையினர், தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை அநாமதேயமாக அணுகுமாறு கோரியுள்ளனர்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பதட்டமடைய தேவையில்லை : Mark Wiseman

Lankathas Pathmanathan

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்கும் கனடா?

Lankathas Pathmanathan

கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலையில் ஆறு இலங்கையர்கள் பலி – 19 வயது இலங்கையர் மீது குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

Leave a Comment