தேசியம்
செய்திகள்

வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவம் – ஹிஜாப் அணிந்த 2 சகோதரிகள் மீது தாக்குதல்

Edmonton நகருக்கு அருகே ஹிஜாப் அணிந்த இரண்டு சகோதரிகள் புதன்கிழமை மதியம் கத்தியால் தாக்கப்பட்டதாக RCMP தெரிவிக்கின்றது.

முகமூடி அணிந்த ஒருவர் ஹிஜாப் அணிந்திருந்த இரண்டு இளம் பெண்களை பயமுறுத்தியதாக RCMP தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் ஒரு பெண் மயக்கமடைந்துள்ளதுடன் மற்றொரு பெண் கத்திமுனையில் பயமுறுத்தப்பட்டுள்ளார்.

Albertaவின் St. Albert என்ற நகரில் Alderwood பூங்காவில் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

சகோதரிகள் மீதான இந்த தாக்குதல் வெறுப்புணர்வைத் தூண்டும் சம்பவம் என்ற வகையில் RCMP விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

Related posts

அவசர காலச்சட்ட பயன்பாடு குறித்த பொது விசாரணைகள் வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

தொடர் கொலையாளி Robert Pickton நிலை குறித்து அடுத்த சில நாட்களில் மதிப்பிடப்படும்

Lankathas Pathmanathan

Louis Plamondon: நீண்ட கால தொடர்ச்சியான சேவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

Leave a Comment