கிழக்கு Ontario நகராட்சியில் முழுமையாக பெண்களைக் கொண்ட நகர மன்றம் முதன்முறையாகத் தேர்வானது.
கிழக்கு Ontario-வின் சிறிய நகராட்சியான Merrickville-Wolford தனித்துவமான ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (27) வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளின்படி, இந்த நகராட்சியின் நகர முதல்வர், நகர மன்ற உறுப்பினர்கள் என அனைத்து பதவிகளையும் பெண் வேட்பாளர்களே முழுமையாக கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்துள்ளனர்.
1. நகர முதல்வர் Anne Barr
2. நகர மன்ற உறுப்பினர் Mary-Catherine Fraser
3. நகர மன்ற உறுப்பினர் Margaret Gural
4. நகர மன்ற உறுப்பினர் Cindy Hanna
5. நகர மன்ற உறுப்பினர் Gina Jelmini
இதன் மூலம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து நகர மன்ற பதவிகளையும் ஐந்து பெண் பிரதிநிதிகள் வெற்றி பெற்றனர்..
கனடாவின் அரசியல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட நகராட்சியின் முழுமையான நிர்வாகக் குழுவும் எந்த ஒரு ஆண் பிரதிநிதிகளும் இன்றி, முழுமையாக பெண்களால் மட்டுமே நிரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும்.
