British Columbiaவின் தற்போதைய COVID பொது சுகாதார உத்தரவுகள் அனைத்தும் May நீண்ட வார இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மாகாண சுகாதார அதிகாரிகள் இந்த அறிவித்தலை வெளியிட்டனர். இந்த நிலையில் March மாதம் 29ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதேவேளை அவசரகால திட்ட சட்டத்தின் கீழ் அரசாங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளதாகவும் John Horgan தெரிவித்தார். இது மக்கள் தங்கள் சொந்த சுகாதார அதிகார பிராந்தியத்திற்கு வெளியே பயணிக்கும் திறனைக் கட்டுப்படுத்தும் வகையில் அமையவுள்ளது.