தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தல் கருத்துக் கணிப்பு: Olivia Chow நிர்வாகத்திற்கான அங்கீகாரம் சரிவு!

Toronto நகர முதல்வர் தேர்தலில் தற்போதைய முதல்வர் Olivia Chow தனது முதன்மைப் போட்டியாளரை விட 9 புள்ளிகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் நீடிக்கிறார்.

இந்தத் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக Olivia Chow, Brad Bradford, Chris Alexander ஆகிய மூவரும் உள்ளனர். இதில் Brad Bradford-டை விட Olivia Chow 9 புள்ளிகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் நீடிக்கிறார்.

எனினும், அவரது நிர்வாகத்திற்கான தனிப்பட்ட மக்கள் அங்கீகார வீதம் சரிந்து வருவது அவரது பிரச்சாரக் குழுவிற்கு ஒரு புதிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Toronto மாநகர முதல்வர் தேர்தலுக்கு நான்கு வாரங்களுக்கு குறைவான காலம் நிலையில், Liaison Strategies நிறுவனம் புதிய கருத்து கணிப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இந்த கருத்து கணிப்புத் தரவுகள் புதன்கிழமை (30) காலை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

இந்தத் தேர்தலில் முடிவெடுத்த மற்றும் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரின் பக்கம் சாயும் வாக்காளர்கள் மத்தியில் தற்போதைய நிலவரத்தின் படி  Olivia Chow 48 சதவீத வாக்காளர்களின் ஆதரவுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

இதில் Brad Bradford 39 சதவீத ஆதரவைப் பெற்றுள்ளார்.

கடந்த வாரத்தில் 40 சதேவீதமாக இருந்த இவரது ஆதரவு தற்போது 1 புள்ளி சரிந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் Chris Alexander 10 சதவீத ஆதரவுடன் எவ்வித மாற்றமுமின்றி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

ஏனைய வேட்பாளர்கள் 3 சதவீத ஆதரவுடன் உள்ளனர்.

வாக்காளர்களில் 15 சதவீதத்தினர் இன்னும் எவருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்காத நிலையில் உள்ளனர்.

Olivia Chow பிரதான வேட்பாளர்களிடையே முன்னிலையை பெற்றிருந்தாலும் இந்தக் கருத்துக் கணிப்பில் அவரது தனிப்பட்ட அங்கீகார வீதம் வலுவடையவில்லை என Liaison Strategie  நிறுவனத்தின் தலைவர் David Valentin குறிப்பிட்டுள்ளார்.

நகர முதல்வரின் செயல்பாடுகளை அங்கீகரிப்பதாக கூறியவர்களின் எண்ணிக்கை 52 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக குறைந்து, முதல் முறையாக 50 சதவீத வரம்பிற்கு கீழ் சரிந்துள்ளது.

தவிரவும் அவரது நிர்வாகத்தில் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறியவர்கள் 3  சதவீதம் உயர்ந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பில் Toronto வாக்காளர்கள் மத்தியில் மிகத் தெளிவான பாலின, பிராந்திய பிளவுகள் வெளிப்படையாகத் தெரிந்துள்ளன.

பெண் வாக்காளர்கள் மத்தியில் Olivia Chow 56 சதவீதம், Brad Bradford 32 சதவீதம் என்ற நிலையில் ஆதரவை பெற்றுள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் மத்தியில் Brad Bradford 47 சதவீதம், Olivia Chow  41 சதவீதம் என ஆதரவை பெற்றுள்ளனர்.

Toronto நகரத்தின் மையப்பகுதியில் (Downtown) Olivia Chow 58 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளார்.

இங்கு Brad Bradford கொண்டுள்ள ஆதரவு 29 சதவீதமாகும் புறநகர்ப் பகுதிகளில் இருவரின் ஆதரவு நிலை மாற்றமடைகிறது.

Etobicoke பகுதியில் Brad Bradford 50 சதவீத ஆதரவுடன் Olivia Chow-வை (40%) முந்தியுள்ளார்.

எனினும், மிகக் கடுமையான போட்டி நிலவும் North York (Olivia Chow 49% – Brad Bradford 40%), Scarborough (Olivia Chow 45% – Brad Bradford 39%) ஆகிய பகுதிகளில் Olivia Chow சிறிய இடைவெளியில் முன்னிலையை தக்கவைத்துள்ளார்.

எதிர்வரும் 26-ஆம் திகதி இறுதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான கால அட்டவணை October 13 ஆரம்பமாகி 18 வரை மொத்தம் 6 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

இந்தத் தேர்தலில் Toronto மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிட மொத்தம் 53 வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

Related posts

Québec-Centre தொகுதி Conservative வேட்பாளர் தேர்தல் திணைக்களத்தால் நிராகரிப்பு!

Lankathas Pathmanathan

Munich பாதுகாப்பு மாநாட்டில் Mark Carney கலந்து கொள்ள மாட்டார்!

Lankathas Pathmanathan

விண்வெளி நாயகன் – முன்னாள் அமைச்சர் Marc Garneau காலமானார்

Lankathas Pathmanathan

Leave a Comment