தேசியம்
செய்திகள்

Pickering-Brooklin தொகுதியில் Conservative கட்சி சார்பில் தமிழர் போட்டி!

Conservative கட்சியின் Pickering-Brooklin தொகுதி வேட்பாளராக தமிழராக சஜந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி இந்த நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் Pickering-Brooklin தொகுதிக்கான Conservative  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார்.

சஜந்த் மோகன் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக Toronto பகுதியில் ஒரு போதகராகவும், சமூக சேவகராகவும், தொழிலதிபராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் York South-Weston) தொகுதியில் போட்டியிட்டு Liberal கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

தற்போது அவர் நியமனம் பெற்றுள்ளது Pickering-Brooklin தொகுதி ஒரு புதிய தொகுதியாகும்.

Pickering-Brooklin தொகுதி 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கனடிய மத்திய தேர்தல் தொகுதி மறு வரையறையின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு புதிய தேர்தல் தொகுதியாகும்.

இந்த புதிய எல்லைகளும், பெயர் மாற்றமும் 2023 September மாதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, 2025 கனடிய மத்திய தேர்தலில் முதன் முதலில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தமிழரான ஜுனிதா நாதன் Liberal கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த தேர்தலில் 9,258 வாக்குகள் வித்தியாசத்தில் இத்தொகுதியை Liberal கட்சி கைப்பற்றியிருந்தாலும், டுத்த தேர்தலுக்காக மற்றொரு தமிழரான சஜந்த் மோகன் Conservative கட்சியின் சார்பில் வேட்பாளராக நியமனம் பெற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

COVID காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

ஒரு மில்லியன் வீடுகள் கட்டப்படும்: O’Toole உறுதி !

Gaya Raja

இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கனடா அச்சுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment