தேசியம்
செய்திகள்

August மாத பணவீக்கம் 3 சதவீதமாக நீடிப்பு?

கனடாவில் கடந்த August மாதத்திற்கான வருடாந்த பணவீக்க விகிதம் (Inflation rate) எவ்வித மாற்றமும் இன்றி 3 சதவீதமாக நீடிக்கிறது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் திங்கட்கிழமை (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியானது.

இந்த அதிகாரப்பூர்வ பொருளாதார அறிக்கை, நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு சற்று குறைந்த போதிலும், வீட்டு வாடகை, விமானப் பயண கட்டணங்கள் கணிசமாக உயர்ந்ததே பணவீக்கம் குறையாமல் இருந்ததற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த July மாதத்தில் 2.5 சதவீதமாக இருந்த வருடாந்த வீட்டு வாடகை அதிகரிப்பு வீதம், August மாதத்தில் 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா, பயணக் கட்டணங்களும் கடுமையாக அதிகரித்துள்ளது.

August மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலை 2.8 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

July மாதத்தில் 25.7 சதவீதமாக இருந்த எரிபொருள் விலை உயர்வு, August மாதத்தில் 22.8 சதவீதமாக சற்று வேகம் குறைந்துள்ளது.

Toronto-வில் முதலாவது ‘கனடா முதலீட்டு மாநாட்டை’ (Investment Summit) பிரதமர் Mark Carney திங்கள் ஆரம்பித்து வைக்கும் நிலையில் இந்த பணவீக்க அறிவித்தல் வெளியானது.

இந்த பணவீக்க நீடிப்பால் கனடிய மத்திய வங்கி, வட்டி விகிதத்தை மேலும் குறைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Related posts

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் கனடா!

Lankathas Pathmanathan

பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமையை கனடா ஆதரிக்கிறது: அமைச்சர் Mélanie Joly

Lankathas Pathmanathan

பிரிவினைவாத பொது வாக்கெடுப்பை எதிர்க்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்த NDP

Lankathas Pathmanathan

Leave a Comment