September 11, 2026
தேசியம்
செய்திகள்

Pierre Poilievre அமெரிக்கா பயணம்

கனடாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் அமெரிக்காவிற்குப் பயணமானார்.

அமெரிக்க ஜனாதிபதி வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre அமெரிக்கா பயணமானார்.

கனடாவை விளம்பரப்படுத்துவதற்காக Pierre Poilievre அவசரமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

Donald Trump நிர்வாகத்தின் வர்த்தகக் கெடுபிடிகளுக்கு மத்தியில், அமெரிக்க சந்தையில் கனடாவின் முக்கியத்துவத்தையும் வர்த்தக நன்மைகளையும் அங்குள்ள அதிகாரிகளிடம் எடுத்துரைப்பது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என கூறப்படுகிறது

அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய  Pierre Poilievre, கனடிய பிரதமருக்கு நேரடி சவால் விடுத்தார்.

கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான நிராகரிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் முழுமையான விபரங்களையும் பிரதமர் Mark Carney உடனடியாக நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என Pierre Poilievre வலியுறுத்திநார்.

Pierre Poilievre நேரடியாக அமெரிக்கா சென்று கனடாவுக்காகப் பேசத் துணிந்திருப்பது கனடிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

RCMP இடைக்கால ஆணையராக Mike Duheme நியமனம்

Lankathas Pathmanathan

வட அமெரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலர் கனடா

Lankathas Pathmanathan

குழந்தைகளை குறி வைத்த பாலியல் மிரட்டல் குற்றச்சாட்டில் கனடிய தமிழருக்கு அமெரிக்காவில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment