தேசியம்
செய்திகள்

வார இறுதிக்குப் பின்னர் கனடாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்:நிபுணர்கள் எச்சரிக்கை!

வார இறுதிக்குப் பின்னர்  COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு  கனடா தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Victoria தின நீண்ட வார இறுதிக்குள் கனடியர்கள்  சமூக சந்திப்புகளின் ஈடுபட்டால் தொற்றுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்ற கவலை வெளியாகியுள்ளது.

கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Howard Njooவும் இந்த எச்சரிக்கையை விடுத்தார். கடந்த விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதிகளில் சமூகக் சந்திப்புகளைத் தொடர்ந்து கனடாவில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்ததையும் அவர் செய்தியாளர் சந்திப்பில் நினைவுபடுத்தினார்.

கனடாவில் அனைத்து விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதிகளில் சமூக சந்திப்புகளின் பின்னர் ஆறு முதல் 10 நாட்களுக்குள் தொற்றுகள் அதிகரித்து பதிவானதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை கனடாவில் 200 இலட்சம் பேர்  தடுப்பூசியை பெற்றுள்ளனர். கனடியர்களில் 49 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். ஆனாலும் மக்கள் தொகையில் நான்கு சதவீதமானவர்கள் மட்டுமே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

இந்தியாவில் இருந்து கிடைக்கும் விசா விண்ணப்பங்கள் உன்னிப்பாக பரிசீலிக்கப்படும்?

Lankathas Pathmanathan

COVID தொற்றின் எண்ணிக்கை Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும்!

Lankathas Pathmanathan

Leave a Comment