தேசியம்
செய்திகள்

எரிசக்தியை பேராயுதமாக பயன்படுத்துவது குறித்து முதல்வர்களிடம் கருத்து வேறுபாடு?

அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தியை ஒரு பேராயுதமாக பயன்படுத்துவது குறித்து Ontario, Alberta மாகாண முதல்வர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தியை ஒரு பேரம் பேசும் கருவியாக பயன்படுத்துவது குறித்து, தனக்கும் Alberta முதல்வர் Danielle Smith-க்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவுவதாக Ontario மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்துள்ளார்.

ஆனாலும் Alberta மாகாணத்தில் இருந்து Ontario மாகாணத்தின் Sarnia நகரில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு முன்மொழியப்பட்ட எண்ணெய் குழாய் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் இருவரும் இணைந்து செயல்படுவதாக Doug Ford கூறுகிறார்.

இரு மாகாண முதல்வர்களும் கடந்த திங்கட்கிழமை (24) தொலைபேசியில் உரையாடினார்.

அமெரிக்காவிற்கு நெருக்கடி வழங்கக்கூடிய மாகாணங்களின் நகர்வு குறித்து இருவரும் இதில் கலந்துரையாடினர்.

Danielle Smith-தை நேரில் சந்திக்க சில வாரங்களில் Alberta பயணிக்க உள்ளதாக Doug For தெரிவித்தார்.

Related posts

மீண்டும் Toronto நகரசபைக்கு தெரிவானார் நீதன் சான்!

Lankathas Pathmanathan

கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு சரிந்து வருகிறது: கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை

தமிழ் கனடிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment