தேசியம்
செய்திகள்

கனடா ‘மோசமான தலைமைத்துவத்தைக்’ கொண்டுள்ளதாக Donald Trump விமர்சனம்?

கனடா ‘மோசமான தலைமைத்துவத்தைக்’ கொண்டுள்ளது என Las Vegas நகர உரையின்போது அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கூறினார்.

சுங்க வரிகளை ஆதரித்த உரையில், ​​அமெரிக்க ஜனாதிபதி கனடாவைக் குறிவைத்துப் பேசினார்.

கனடா சுங்கவரிகள் மூலம் அமெரிக்காவை ‘ஏமாற்றி விட்டது’ என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு கனடிய பிரதமர் பதிலளித்தார்..

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தனது சுங்கவரி முறையைப் புகழ்ந்தும், கனடாவை அவமதிக்கும் வகையிலும் புதன்கிழமை (05) பேசினார்.

கனடாவின் அரசியல் தலைமைத்துவத்தை Donald Trump “மோசமானது” என ஏளனப் பார்வையுடன் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த கனடிய பிரதமர் Mark Carney, கனடியத் தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களுக்காக குரல் கொடுக்கிறோம் என வலியுறுத்தினார்.

ஆரம்பத்திலிருந்தே “நாங்கள் அவ்வாறே செய்து வருகிறோம்” எனவும் பிரதமர் கூறினார்.

கடந்த வாரம் Donald Trump-புடன் பேசியதாகவும் Mark Carney செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (06) குறிப்பிட்டார்.

இன்றைய சூழலை ஒரு “கடினமான பேச்சுவார்த்தை” காலம் என அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​கனடியப் பிரதமர் விவரித்தார்.

அமெரிக்காவை தனது வரிகள் செல்வந்தர்களாக்கியுள்ளன என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கூறினார்.

January 2025 முதல் May 2026 வரையிலான காலகட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், Donald Trump நிர்வாகத்தின் சுங்க வரிகள் மூலம் அமெரிக்கா சுமார் $269 பில்லியன் அளவிலான மொத்த சுங்க வருவாயை ஈட்டியது என ஒரு மதிப்பீடு குறிப்பிடுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து வெளியானது.

அமெரிக்கா பெற்ற  சுங்க வருவாயில் சுமார் $166 பில்லியன், உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது Donald Trump விதித்த வரிகள் மூலம் திரட்டப்பட்டது.

இருப்பினும், அந்த வரிகள் February மாதம்  அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டன.

மேலும், Donald Trump நிர்வாகம் இதுவரை $100 பில்லியன் வரை மீளச் செலுத்தியுள்ளதாக நீதிமன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவும் அமெரிக்காவும் ஓராண்டுக்கும் மேலாக வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல கனடியப் பொருட்களுக்கு எதிராக Donald Trump, தொடர்ச்சியான வரிகளை விதித்துள்ளார்.

அதற்கு  பதிலளிக்கும் வகையில் கனடாவும் சில அமெரிக்க இறக்குமதிகள் மீது தனது வரிகளை விதித்துள்ளது.

இரு நாடுகளும் பல மாதங்களாக அதிகாரப்பூர்வமான தடையற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

CUSMA எனப் பொதுவாக அழைக்கப்படும் கனடா-அமெரிக்கா-Mexico வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து கனடா மௌனம் காத்து வருகிறது.

கனடாவின் உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தை குழுவினர் வியாழனன்றும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பினர்.

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர்  Dominic LeBlanc, கனடாவின் தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் Janice Charette ஆகியோர், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியை வியாழனன்று அமெரிக்க தலைநகரில் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது..

Related posts

கோடை காலத்திற்குள் போதுமான தடுப்பூசிகள் இருக்கும் ; பிரதமர்

Gaya Raja

COVID தொற்றின் கோடைகால  அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Yellowknife நகருக்கு படிப்படியான வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த அதிகாரிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment