தேசியம்
செய்திகள்

கனடாவின் ஒற்றுமையைக் காக்கும் பிரதான எதிர்க்கட்சியின் பிரதிநிதி நியமனம்!

Alberta பொது வாக்கெடுப்பு பொறுப்பாளர் ஒருவரை Conservative கட்சியின் தலைவர் நியமிக்கிறார்.

Alberta மாகாணத்தின் Sturgeon River-Parkland தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Dane Lloyd இந்த நியமனத்தை பெறுகிறார்.

Conservative தலைவர் Pierre Poilievre இந்த நியமனத்தை அறிவித்தார்.

கனடாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்த எதிர்கால வாக்கெடுப்பை நடத்துவதா என்பது குறித்து, Alberta மாகாண மக்கள் எதிர்வரும் October மாதம் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் தனது நியமனத்தின் மூலம்  பிரிவினை வாக்கெடுப்புக்கு முன்னதாக, “கனடாவின் ஒற்றுமையைக் காப்பதற்கான” கோடைக்காலப் பிரச்சாரத்தை Pierre Poilievre ஆரம்பிக்கிறார்.

Alberta மக்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்கவும், அவர்களின் கவலைகளுக்கு தீர்வு காணவும் Dane Lloyd பணியாற்றுவார் என பொது வெளியில் வெளியான கடிதம் ஒன்றில் Pierre Poilievre தெரிவித்துள்ளார்.

Alberta மாகாண மக்களிடம் நியாயமான குறைகள் இல்லை என்பது போல Conservative கட்சியால் பாவனை செய்ய முடியாது என அவர் கூறுகிறார்.

2017 முதல் Sturgeon River-Parkland தொகுதியை Dane Lloyd பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

Related posts

NDP தலைவர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவையிடம் பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மைக்கான பொது அழைப்பு!

Lankathas Pathmanathan

September இறுதிக்குள் அனைத்து கனடியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment