September 16, 2026
தேசியம்
செய்திகள்

வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோரி கடிதம் எழுதிய கனடா?

வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோரி, கனடா அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மூன்று நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என பரிந்துரைத்து, கனடா அமெரிக்கா, மெக்சிகோவிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

கனடாவில் CUSMA என அறியப்படும், கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டாய மறு ஆய்வின் ஒரு பகுதியாக இந்தக் கடிதம் அவசியமாகிறது.

இந்த ஒப்பந்தம் நன்மையானது என அந்தக் கடிதடித்தில் Dominic LeBlanc குறிப்பிட்டார்.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியை சந்திப்பதற்காக Dominic LeBlanc  செவ்வாய்கிழமை (02) Washington பயணிக்க உள்ளார்.

கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வ CUSMA வர்த்தக பேச்சுவார்த்தைகள் இதுவரை ஆரம்பிக்காத நிலையில், அமெரிக்காவும் மெக்சிகோவும் தங்களது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் மெக்சிகோ கனடாவை விட முன்னிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை கனடிய பிரதமர் Mark Carney குறைத்து மதிப்பிடுகிறார்.

Related posts

Toronto காவல்துறை முன்னாள் தலைவர் PC வேட்பாளரானார்

Lankathas Pathmanathan

கனடா தினத்தை கொண்டாட வேண்டாம் என தேர்வு செய்பவர்களை மதிக்க வேண்டும்: பிரதமர்

Gaya Raja

கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை அமெரிக்க எல்லை திறந்த பின்னர் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்தது!

Gaya Raja

Leave a Comment