தேசியம்
செய்திகள்

Alberta பொதுவாக்கெடுப்பு கேள்வி குறித்து நாடாளுமன்றம் கருத்து தெரிவிக்காது?

Alberta மாகாணத்தின் பொதுவாக்கெடுப்பு கேள்வி குறித்து நாடாளுமன்றம் கருத்து தெரிவிக்காது என பிரதமர் Mark Carney கூறினார்.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட October 19  பொது வாக்கெடுப்பில் Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து செல்வது குறித்த ஒரு கேள்வி இணைக்கப்படும் என முதல்வர் Danielle Smith கடந்த வாரம் அறிவித்தார்.

Alberta மாகாணத்தின் இலையுதிர் கால பொதுவாக்கெடுப்பு கேள்வி, கனடாவிலிருந்து அந்த மாகாணம் பிரிவது குறித்த வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் நிலை தோன்றியுள்ளது.

பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்திற்கு  மேற்பார்வைப் பொறுப்பை வழங்கும் மத்திய சட்டம், முன்மொழியப்பட்ட கேள்வியால் செயல்படுத்தப்படவில்லை என தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக Mark Carney செவ்வாய்க்கிழமை (26) கூறினார்.

இந்த பொதுவாக்கெடுப்பு கேள்வி கனடாவின் Clarity சட்டத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை மத்திய அரசு முறையான ஆய்வு செய்து வருவதாக பிரதமர் முன்னர் கூறியிருந்தார்.

Related posts

அனைத்து மாகாணங்கள், 2 பிரதேசங்களில் வானிலை எச்சரிக்கைகள்

Lankathas Pathmanathan

பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை வரையறுக்கும் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் Ontario

Lankathas Pathmanathan

சவூதி அரேபியாவுடன் மீண்டும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment