தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் தைவான் பயணத்திற்கு சீனத் தூதரகம் கண்டனம்

தைவானுக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் பயணத்தை கனடாவுக்கான சீனத் தூதரகம் கண்டித்துள்ளது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong அடுத்த வாரம் தைவான் தலைவர்களை சந்திக்க ஏற்பாடாகியுது.

கனடாவுக்கான சீனத் தூதரகம் ஏற்கனவே இந்தப் பயணத்தை கண்டித்துள்ளது. இது “சீனா-கனடா உறவுகளுக்கான சிவப்பு கோட்டை” மீறுவதாக கனடாவுக்கான சீனத் தூதரகம் வாதிடுகிறது.

“கனடாவின் இறையாண்மையை” நிலைநாட்டும் நோக்கில் இந்தப் பயணம் அமைவதாக நாடாளுமன்ற உறுப்பினர்  Michael Chong தெரிவித்தார்.

இந்தப் பயணம் இரண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது என Conservative நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் Michael Chong  கூறினார்.

சீன மக்கள் குடியரசின் (PRC) அச்சுறுத்தல்களின் முதன்மையாக இருக்கும் ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம் என Michael Chong தனது X தளத்தில் குறிப்பிட்டார்.

இரண்டாவதாக, தைவானுக்கு பயணம் செய்யும் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து கனடாவிற்கான சீன மக்கள் குடியரசின் தூதர் விடுத்த எச்சரிக்கையை எதிர்கொண்டு, கனடாவின் இறையாண்மையை நிலைநாட்டுவது தனது நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தைவான அதிகாரிகளை கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து சந்தித்தால், கனடாவுக்கு சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்படலாம் என சீன தூதர் Wang Di அண்மையில் கனடிய  பத்திரிகையில் தெரிவித்திருந்தார்.

கனடா ஒரு இறையாண்மை, சுதந்திரம் கொண்ட நாடு என குறிப்பிட்ட Michael Chong, கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச அளவில் எங்கு பயணிக்கலாம் என்பது குறித்து நாங்கள் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறுவதில்லை என   Michael Chong தெளிவுபடுத்தினார்.

ஒரு குறிப்பிட்ட கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் தைவான் பயணம், கனடிய அரசாங்கத்தின்  ‘ஒரே சீனா’ கொள்கைக்கான உறுதிப்பாட்டிற்கு முரணானது என  கனடாவிற்கான சீனத் தூதரகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பொது சேவை ஊழியர் சங்கத்தின் முதலாம் நாள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Niagara Falls பகுதியில் மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி

Lankathas Pathmanathan

2026 FIFA உலகக் கோப்பை தொடரில் B பிரிவில் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment