தேசியம்
செய்திகள்

University-Rosedale தொகுதியில் Liberal கட்சி வெற்றி

Ontario மாகாணத்தின் University-Rosedale தொகுதியில் Danielle Martin வெற்றி பெற்றார்.

திங்கட்கிழமை (13) நடைபெற்ற மத்திய இடைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் Liberal கட்சி சார்பில் Danielle Martin வெற்றி பெற்றார்.

முன்னாள் Liberal அமைச்சரும், துணை பிரதமருமான Chrystia Freeland பதவி விலகிய நிலையில் University-Rosedale தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் முன்கூட்டிய வாக்களிப்பின் போது வாக்காளர் வருகை குறைவாக இருந்தது.

2025-இல் 14,360 பேர் முன்கூட்டியே வாக்களித்திருந்த நிலையில், இந்த இடைத் தேர்தலில் 9,400 வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இந்த இடைத் தேர்தலில் Liberal கட்சி சார்பில் Danielle Martin, Conservative கட்சி சார்பில் Don Hodgson, NDP கட்சி சார்பில் Serena Purdy, பசுமைக் கட்சி சார்பில் Andrew Massey ஆகியோர் போட்டியிட்டனர்.

Related posts

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிட மற்றுமொரு தமிழர் ஆர்வம்!

Lankathas Pathmanathan

கனடா ஒரு இறையாண்மை கொண்ட நாடு: அமெரிக்கா ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் பதில்!

Lankathas Pathmanathan

Poilievre தலைமையில் Toronto பெரும்பாகத்தில் Conservative கட்சி வெற்றி பெறாது: Brown

Lankathas Pathmanathan

Leave a Comment