தேசியம்
செய்திகள்

Alberta: சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி விலகல்!

Alberta மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பதவி விலகினார்.

அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை அமைச்சர் Rebecca Schulz சமூக ஊடகத்தில் புதன்கிழமை (31) வெளியிட்டார்.

விரைவில் மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (02) முதல் அமைச்சரவையில் இருந்தும் May மாதத்திற்குள் Calgary-Shaw தொகுதியின் United Conservative (UCP) சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறினார்.

தனது வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை தேட வேண்டிய நேரம் இது என குறிப்பிட்ட Rebecca Schulz, தானும் மாகாண முதல்வரும் செய்த பணிகள் குறித்து பெருமையடைவதாவும் தெரிவித்தார்.

தொடர்ந்து முதல்வர் Danielle Smith, அவர் தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் Jason Kenney தலைமையின் கீழ் 2019-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து Rebecca Schulz பல இலாகாக்களில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து Jason Kenney விலகியதை தொடர்ந்து, தலைமைக்கான போட்டியில் Rebecca Schulz  பங்கேற்றார்.

இந்த நிலையில் அவரது பணிக்கு முதல்வர் Danielle Smith ஒரு அறிக்கையில் நன்றி தெரிவித்தார்.

புதிய சுற்றுச்சூழல் அமைச்சராக Grant Hunter பதவியேற்பார் எனவும் முதல்வர் கூறினார்.

இவரது பதவி விலகலால் வெற்றிடமாக உள்ள இடத்தை நிரப்ப ஆறு மாதங்களுக்குள் ஒரு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.

அடுத்த Alberta பொதுத் தேர்தல் October 2027-இல் நடைபெற உள்ளது.

2025-ஆம் ஆண்டு பதவி விலகுவதாக அறிவித்த இரண்டாவது UCP அமைச்சர் Rebecca Schulz ஆவார்.

கொள்முதலைக் கையாள்வது குறித்த கவலைகள், சுகாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் காரணத்தால், Peter Guthrie கடந்த February மாதம் உள்கட்டமைப்பு இலாகாவில் இருந்து விலகினார்.

பின்னர் அவர் தனது விமர்சனத்திற்கு UCP மாகாணசபை குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Quebec மாகாணம் COVID தொற்றின் மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பை பதிவுசெய்தது !

Gaya Raja

COVID தொற்று காலத்தில் overdose, அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு!!

Gaya Raja

Vancouver தீவில் நிலநடுக்கம்!

Lankathas Pathmanathan

Leave a Comment