September 11, 2026
தேசியம்
செய்திகள்

கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடனான விவாதிக்கவில்லை: அனிதா ஆனந்த்

அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடனான சந்திப்பில் கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கவில்லை என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

உலகளாவிய நெருக்கடி குறித்து விவாதிக்க G7 நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்த வாரம் Niagara பகுதியில் சந்தித்தனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio , அனிதா ஆனந்த் இந்த உச்சி மாநாட்டின் போது புதன்கிழமை (12)  சந்தித்தனர்.

ஆனால் இந்த சந்திப்பில் கனடாவுக்கு அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து தான் உரையாடவில்லை என அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

மாறாக  Ukraine, மத்திய கிழக்கு, Haiti, Arctic இறையாண்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இவர்கள் இருவரும் பேசினர்.

கனடா-அமெரிக்க வர்த்தகம், அமைச்சர் Dominic LeBlanc  எல்லைக்குள் வருகிறது என அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

கடந்த மாதம் கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிறுத்தி வைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி Ronald Reagan வரிவிதிப்புகளை விமர்சித்ததாக மேற்கோள் காட்டிய Ontario மாகாணத்தின் விளம்பர பிரச்சாரத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவை Donald Trump எடுத்திருந்தார்.

இந்த விளம்பரத்திற்காக பிரதமர் Mark Carney மன்னிப்பு கோரினார்.

தென் கொரியாவில் நடந்த உலகத் தலைவர்கள் கூட்டத்தில் கனடா-அமெரிக்கா தலைவர்கள் நட்பாகத் தோன்றிய போதிலும், பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் சிறுபான்மை ஆட்சியமைக்கும் Liberal கட்சி!

Gaya Raja

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ஆரம்பித்த Air Canada

Lankathas Pathmanathan

Winnipeg நகரில் “தீவிரமான சம்பவமொன்றில்” மூவர் கொலை – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment