தேசியம்
செய்திகள்

செலவுகளை கட்டுப்படுத்த பிரதமர் உறுதி!

செலவுகளை கட்டுப்படுத்த கனடிய பிரதமர் Mark Carney உறுதியளித்தார்.

விரைவில் மத்திய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.

கனடாவின் அடுத்த வரவு செலவுத் திட்டம் “செலவைக் கட்டுப்படுத்தும் – பெரிய அளவிலான முதலீட்டை ஊக்குவிக்கும்” என அவர் கூறினார்.

புதன்கிழமை (03) நடைபெற்ற Liberal அமைச்சரவை சந்திப்பின் போது பிரதமர் மார்க் செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை கூறினார்.

“ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மத்திய அரசு சராசரியாக ஆண்டுக்கு ஏழு சதவீதத்திற்கும் மேலாக செலவினங்களை அதிகரித்து வருகிறது” என அவர் தெரிவித்தார்.

இது சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறிய பிரதமர், இது ஒரு நிலையான சூழ்நிலை அல்ல எனவும் நாம் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களில் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கும் நிலையில் இரண்டு நாள் அமைச்சரவை சந்திப்பு Toronto -வில் ஆரம்பித்தது.

Related posts

British Colombia பனிச்சரிவில் மூவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

கனடாவில் நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும்!

Lankathas Pathmanathan

Leave a Comment