September 10, 2026
தேசியம்
செய்திகள்

Scarborough வணிக வளாகத்தில் சந்தேகத்திற்குரிய மரணம்?

Scarborough Town Centre வணிக வளாகத்தில் நிகழ்ந்த மரணம் குறித்து Toronto காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வணிக வளாகத்தின் கழிப்பறையில் 20 வயதுடைய ஒருவர் துப்பாக்கியுடன் இறந்த நிலையில் காணப்பட்டதை  அடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை (21)பிற்பகல் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த மரணத்திற்கான காரணம் வெளியிடப்படாத நிலையில், இந்த சம்பவம் “சந்தேகத்திற்கிடமான மரணம்” என விசாரிக்கப்படுகிறது என Toronto காவல்துறையை சேர்ந்த பகீர் சர்வானந்தன் தெரிவித்தார்.

இதில் ஒரே ஒரு துப்பாக்கிச் சூடு மட்டுமே நிகழ்ந்திருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து சந்தேக நபர்களை காவல்துறை தேடவில்லை எனவும் பகீர் சர்வானந்தன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதியில் NDP வெற்றி!

Lankathas Pathmanathan

Belarus மீது கனடாவும் பொருளாதாரத் தடை

Gaya Raja

Barrhaven நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment