தேசியம்
செய்திகள்

Scarborough-வில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் அமைப்பது குறித்து Patrick Brown – பார்த்தி கந்தவேள் கலந்துரையாடல்!

Scarborough-வில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து Brampton நகர முதல்வருடன் Scarborough தென்மேற்கு நகரசபை உறுப்பினர் கலந்துரையாடினார்.

Brampton நகர முதல்வர் Patrick Brown, Scarborough தென்மேற்கு நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த வாரம் நடைபெற்றது.

Brampton நகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பல்வேறு நகரசபை விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் தெரிவித்தார்.

Brampton நகரில் அண்மையில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் திறக்கப்பட்டது குறித்தும், அதேபோல் Scarborough-வில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் அமைப்பதற்கான நகர்வு குறித்து இருவரும் உரையாடினர்.

இந்த நினைவகம் தமிழர் சமூகத்தின் நீடித்த வலிமையின் அடையாளமாக திகழும் என Scarborough தென்மேற்கு நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் கூறினார்.

Related posts

NATOவில் பின்லாந்து இணைவுக்கு கனடா வாழ்த்து

Lankathas Pathmanathan

CTVக்கு எதிராக வழக்கில் தீர்வை எட்டிய Patrick Brown

Ontario Line கட்டுமானச் செலவு மூன்று மடங்காக அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment