September 30, 2026
தேசியம்
செய்திகள்

Markham நகரசபையின் 7-ஆம் வட்டாரத்தில் இடைத் தேர்தல்!

Markham நகரசபையின், 7-ஆம் வட்டாரத்தில் இடைத் தேர்தல் மூலம் புதிய நகரசபை உறுப்பினர் தெரிவாகவுள்ளார்.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்ட Markham நகரசபையின் 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் ஜுனிதா நாதன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் அவரது நகரசபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் 7-ஆம் வட்டாரத்திற்கான நகரசபை உறுப்பினர் இடைத் தேர்தல் மூலம் தெரிவாகவுள்ளார்.

Markham நகரசபை இந்த முடிவை  எடுத்துள்ளது.

இது குறித்த வாக்கெடுப்பு நகர சபையில் நடைபெற்றது.

அதில் தற்போது வெற்றிடமாக உள்ள நகரசபை உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்காமல் இடைத் தேர்தல் ஒன்றை நடத்த நகரசபை வாக்களித்துள்ளது.

November 14, 2026 அன்று முடிவடையும் தற்போதைய பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்குப் பணியாற்ற இந்த புதிய உறுப்பினர் இடைத் தேர்தல் மூலம் தெரிவாகவுள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (30)  முதல் இடைத் தேர்தலுக்கான நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

தேர்தல் வாக்களிப்பு September அல்லது October ஆரம்பத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.

Related posts

காட்டுத் தீயை எதிர்த்துப் போராட உதவும் கனேடிய ஆயுதப் படையினர்

Lankathas Pathmanathan

எதிர்க்கட்சியின் மற்றொரு சட்டமூலம் தோல்வி!

Lankathas Pathmanathan

மேலதிகமான AstraZeneca தடுப்பூசிகளை ;கனடா பிற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும்

Gaya Raja

Leave a Comment