தேசியம்
செய்திகள்

NDPயின் அவசர விவாத கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்

Ontario அரசாங்கம் notwithstanding உட்பிரிவைப் பயன்படுத்துவது குறித்த NDPயின் அவசர விவாத கோரிக்கையை சபாநாயகர் மறுத்துள்ளார்.

புதிய ஜனநாயகக் கட்சியினர் இந்த அவசர விவாதத்தைக் கோரி சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

55 ஆயிரம் கனடிய பொது ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களின் எந்த ஒரு வேலை நிறுத்தத்தையும் தடுக்கும் சட்டமூலம் ஒன்றை இந்த வாரம் கல்வி அமைச்சர் மாகாண சபையில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில் இது குறித்த அவசர விவாதத்திற்கு Ontario NDP மாகாணசபை உறுப்பினர் Matthew Green சபாநாயகர் Anthony Rotaவுக்கு கடிதம் மூலம் கோரினார்.

ஆனாலும் இந்த கோரிக்கை சட்ட சபையின் நிலையியற் கட்டளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என சபாநாயகர் கூறினார்.

Related posts

ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய தாக்குதல்கள் கனடாவில் அதிகரிப்பு

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Gaya Raja

70வது NATO அமர்வு கனடாவில்

Lankathas Pathmanathan

Leave a Comment