February 12, 2025
தேசியம்
செய்திகள்

சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை இடைநிறுத்திய RCMP

சீன அரசாங்கத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை RCMP இடைநிறுத்துகிறது.

கடந்த வருடம் October மாதம் கையெழுத்திடப்பட்ட 550 ஆயிரம் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தம் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம் வியாழக்கிழமை (08) இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஒப்பந்தம் மூலம் பொருத்தப்பட்ட உபகரணங்களை RCMP பரிசோதனையிட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் தேசிய பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தங்கள் வழங்கப்படும் போது அவதானமாக செயல்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட ஒப்பந்தங்களை விசாரித்து வருவதாக தேசிய பாதுகாப்புத்துறை வியாழனன்று தெரிவித்தது.

சீனாவுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து பிரதமர் Justin Trudeau நேற்று அதிருப்தி தெரிவித்திருந்தார்.

Related posts

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள்: நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு புதிய வழிகாட்டுதல்

Lankathas Pathmanathan

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

Gaya Raja

ஹெய்ட்டியில் உள்ள கனடிய தூதரகம் மூடப்படவில்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment